பாரதியார்
கவிஞர் அகணி சுரேஸ்
பாரதியார்
ஈந்த புரட்சிக் கவிதைகள்
ஈரமான நெஞ்சை இறுகிடச் செய்யும்
மகாகவி பட்டத்தை மாண்புறப் பெற்றார்
தகாத மாந்தர் செயலால் வருந்தினார்
பெண்கள் விடுதலைக்கு போர்க்கொடி ஏந்தினார்
கண்களில் வீரம் கருமீசைத் துள்ளல்
தலைப்பாகை சூடி நிமிர்ந்த நடையும்
கலைச்செல்வம் பெற்றுக் கவிதை பொழிந்தார்
படித்துப் படித்துப்; பரவசம் பெற்றோம்
முடிக்க மனமின்றி மூழ்கியே கொள்வோம்
அளவில்லாப் பாடல்கள் ஓசையில் உச்சம்
உளத்தினில் உந்திடும் உற்சாகம் மேவும்
விபுலரின் செய்கை வையகத்தில் பெருமை
கபடமும் இல்லாது கண்டிக்கும் பாவலன்
எங்கள் மொழிக்கு எழிலைக் கொடுத்தவர்
மங்காப் புகழை வளமுறு சொத்தாய்
தமிழுக்குத் தந்துமே வாழ்ந்து மறைந்தார்
அமிழ்தான எம்மொழியின் அற்புதப் போராளி
என்றும் நிலைக்கும் இவரது பேர்புகழ்
வென்றார் விடுதலை முன்நிலை மாகவிஞர்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்