பாலாஜி.ச.இமலாதித்தன்
கவிதைகள்
ஞாபகம்
மனதும் மூளையும் ஒன்றிணையும்
ஏதோவொரு ஒற்றை புள்ளியில்
குவிக்கப் படுகின்ற
ஒட்டுமொத்த எண்ணங்களும்
என்னுள் ஊடுருவ முயற்சிக்கும்
சின்னஞ்சிறு நிமடங்களிளெல்லாம்
ஏதோவொரு நெருடல்கள்
உள்ளுக்குள் நெருங்கி
உன்னை மட்டுமே
ஞாபகப்படுத்திச் செல்கிறது...!
ஞாபகம்
உள்ளுக்குள் தீண்டப்படுகின்ற
காயப்படுத்திய நிகழ்வுகளால்
மறக்கப்பட்ட மனதிற்குள்ளே
தினம்தினம் துவள செய்கின்ற
அந்தவொருசில நாழிகையெங்கும்
வெட்டவெளிச்சமாய்
ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது
நீங்காத உன் நினைவுகளை...!
காதல்
வறண்டு கிடக்கின்ற
பாலைவனத்து வெளியினூடே
காய்ந்து நிற்கும்
ஒற்றைமர கிளையின் மீது
சுடுமணல் காற்றிலேறி
பற்றிக்கொண்ட பறவை போல
ஒட்டிக்கொண்டது
உன்மீதான
எனக்கான காதல்...!
காதல்
உன் பெயரை
உதடு உச்சரித்து
உரைக்கும் முன்பே
காலங்கெட்டு போச்சுதென்று
கதை பேசும் கூட்டம் நடுவே
கூனிக்குறுகி நின்று
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது
நான் சொல்லத்தவறிய
காதல்...!
emalathithan@gmail.com
|