ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் அன்பழகன்ஜி
உயரே
பறந்ததும்
காணாமல் போகிறது
பரந்த ஆகாயம்.
இரவுப் பயணம்
ஓட்டுநருக்கு துணையாகிறது
பழைய பாடல்கள்.
அடிதாங்க இயலாது
அலறிக் கொண்டிருக்கின்றன
உறுமி மேளங்கள்.
உடுத்திய உடையை
கசங்கிடாமல் வைத்திருக்கிறது
ஜவுளிக்கடை பொம்மை
தூண்டில் மிதவையை
கொத்திபார்த்து ஓடுகிறது
மீனொன்று
புறாக்களை விரட்டி
பக்தர்களை அழைக்கிறது
கோயில் மணியோசை
ஆற்றை கடக்கும்
எத்தனிப்பில் நிற்கிறது
அய்யனார் மண்குதிரை.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்