கவிமழை கொட்டும் முகில்

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

ழுகின்ற ஞாயிறாய் இடருற்ற சமுதாய
         இருள்நீக்க எழுந்து வந்தான்!
விழுகின்ற விதையாகி விடுதலைப் பயிராக
         வீரத்தை உணர்வில் வைத்ததான்!
வழுவான இனமத வர்க்கபே தங்களாம்
         வடுக்களைக் நீக்கி வைத்தான்!
தொழுதுகை கூப்பிய துரௌபதை வடிவிலே
         துயர்போக்கச் சபத மிட்டான்!

றியாமைக் காட்டினை அழலுக்கு இரையாக்க
         அக்கினிக் குஞ்சு வைத்தான்
பொறியாகிப் பழமையைப் பொசுக்கிடும் போரிலே
         புதுமைக்குப் பாதை செய்தான்!
குறியான கொள்கையில் குலையாத கவிமழை
         கொட்டுமோர் முகிலாய் வந்தான்!
நெறிதந்த மாகவிஞன் நினைவாக அவன்பாடல்
         நிலையாகும் உலகில் நின்றே!
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்