தமிழும் வேதமும் தரித்த நாவலர்
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
ஆறுமுக
நாவலரை அருஞ்சைவ நாயகரை
அத்துவித
தத்துவங்கள் ஆகுங் கேண்மை
கூறுமொரு வித்துவத்தைக் கோவிலொடும் நீறணியக்
கோபுரமும்
விளக்கமெலாங் கொடுத்த செம்மல்
பேறுபெறத் தமிழமுதம் பேரிலக்க ணந்தொன்மை
பெருபுராணம்
திருக்குறளும் பேச வைத்தார்!
சாறுமொரு புத்தகங்கள் சார்ந்தச்சு வாகனமும்
சந்தித்த
திருமுகத்துச் சரிதம் கண்டார்!
ஆயிரத்து
எண்ணூற்று இருபதிரு ஆண்டதினில்
அணிமாதம்
மார்கழியில் அரும்பத்(து) தெட்டில்
தோயநிதம் தோன்றியதோர் திருப்புகலி யறிஞரொடும்
சொலநின்ற
குடும்பமெனத் தேர்ந்த கல்வி
நேயரென நால்வரென நின்றசகோ தரத்தோடும்
நித்தியநற்
சோதரிகள் நிலவும் மூவர்
ஏயமென நல்லூரில் எழிற்திருவாம் குடும்பமொடும்
ஏற்றமுற
நாவலர்தாம் இலங்க நின்றார்!
ஆங்கிலேய
அரசாட்சி ஆட்சிமன்ற நீதிமுகம்
அழைக்கையிலே ஆறுமுகர்
அளித்தார் சாட்சி!
ஆங்கிலத்தில் அல்லாமல் அருந்தமிழிற் கூறென்கச்
சம்புகுண்டம் இருந்தேயான்
வந்தேன் என்றார்!
தாங்கியதோர் தமிழ்சொல்லத் தடுக்கியதோர் பெயர்ப்பாளர்
தமிழ்வேண்டாம் ஆங்கிலமே
தாரும் என்றார்!
பாங்குறவே பரந்தமொழிப் பட்டறிவில் நாவலரும்
பண்பான உரைசொல்லிப்
பகர்ந்தார் தாமே!
சைவமொடுந்
தத்துவங்கள் சாதியதும் மூடநிலைச்
சார்பதிலும் உண்மைகளைச்
சாற்றி வைத்தார்
தேவநிறை பைபிளினைப் தேன்தமிழிற் பெயர்த்திட்ட
திருவாசான் என்றதொரு திருவைப்
பெற்றார்
ஆவலொடும் அச்சேற்றி அரும்பாடப்; புத்தகங்கள்
அழகுசிறார் தன்னோடும் அணியஞ்
செய்தார்
காவலுறை ஆயிரத்து எண்;ணூற்று எழுப(த்)தொன்பில்
கனிமார்க ழீஐந்தில் கடவு ளானார்!
(சம்புகுண்டம் - நாவற்குழியூர்)
(சிறுவிளக்கம்: ஆங்கிலத்தில் சாட்சிசொல்ல, தமிழிலே உரையும்
என்று நீதிபதி கோபமுற்று உரைக்கஇ சுத்த செந்தமிழில்
உரைசொல்லிய ஆறுமுக நாவலரின் தமிழை மொழிபெயர்க்க முடியாத
பெயர்ப்பாளர், இல்லை நீர் ஆங்கிலத்திலேயே சாட்சி சொல்லும்
எனத் தடுமாறிய விளக்கமே சம்புகுண்டம் என்ற இந்தச் சொல்லில்
உடையதென்று அறிவீர்)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|