ஆறுமுக நாவலர்
கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
தாய்போல்
தமிழையும் தன்கண்போல் சைவத்தையும்
ஓய்வின்றி ஆய்வுசெய்த உத்தமர் - தூயதமிழ்க்
கல்விப் பசிக்குணவு காத்திரமாய் தந்தமகான்
நல்லிதைய நாவலரை நாடு!
நல்லதமிழ்ச்
சொல்லழகு நாவலரின் தில்லழகு
வல்லவரை வாதினிலே வெற்றிகொண்ட - சொல்லுழவர்
சைவத் தமிழுலகச் சான்றோர் சபைதனிலே
சைவத்தை மெய்ப்பித்த சாது!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|