ஹைக்கூ அந்தாதி
கவிஞர்
நாகை ஆசைத்தம்பி, கோவை
சோறு
குறைவுதான்
கூட்டத்தை
அழைத்தது
காகம்,!
காகம்
கரைந்தும்
வருவோர்
யாருமில்லை
மரத்தடி
பிச்சைக்காரன்,,,!
பிச்சைக்காரன்
குரல்
காதில்
கேட்பதில்லை
பணக்காரன்
வீடு,,,!
வீடு
காலியானது
அனாதையாய்
ஆணி,,,!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|