நற்பெயர் தருவது நற்பண்பே
பாவலர் கருமலைத்தமிழாழன்
நற்பெயரோ
படிப்பிருந்தால் வந்தி டாது
நான்குவகை அறிவுதரும் கல்வி
கற்றோன்
தற்பெருமை தலைகனம்தான் கொண்டி டாமல்
தான்பெற்ற அறிவினாலே உயரும்
போது
மற்றவரை மதிப்பதுடன் உதவு கின்ற
மனமில்லை என்றாலோ மதியார்
யாரும்
உற்றநல்ல பண்புடனே அணைக்கும் போதே
ஊரெல்லாம் புகழ்ந்தவனின்
பெயரைச் சொல்லும் !
ஆட்சியினைச்
செய்கின்ற அமைச்ச ரென்னும்
அரும்பதவி நற்பெயரைக் கொடுத்தி
டாது
ஆட்சிக்குத் துணைநின்று வழிந டத்தும்
அலுவலர்க்கும் பதவியாலே பெயர்வ
ராது
காட்சிக்கே எளியவராய்க் கடமை தன்னைக்
கையூட்டும் ஊழலின்றி நேர்மைப்
பண்பில்
மாட்சிதரும் வகையினிலே செய்யும் போதே
மக்களெல்லாம் பெயர்சொல்லிப்
போற்று வார்கள் !
பணந்தன்னைக்
கட்டுகட்டாய் வைத்தி ருக்கும்
பணக்காரன் என்பதாலே பெயர்வ ராது
கணவானாய் அடியாட்கள் நால்வ ரோடே
காட்சிதரும் தோரணத்தால் பெயர்வ ராது
மணம்வீசி அழைத்தளிக்கும் பழம ரங்கள்
மண்ணூற்றை எடுத்தளிக்கும் ஊர்க்கு
ளங்கள்
குணம்போல ஊர்க்குதவும் பண்பி ருந்தால்
கும்பிட்டே வாழ்த்திடுவர் வள்ளல்
என்றே !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|