இயேசுவே
துணை
அருட்கவி ஞானகணேசன்
கர்த்தரைப் பாடுவோம் கன்னித் தமிழிலே
கும்மி
கருணை
வடிவான கர்த்தராம் யேசுவார்
காட்டிய பாதையில் சென்றிடுவோம்
அருளினை அள்ளி அளவின்றித் தந்திடும்
அன்பாளன் போதனை போற்றிடுவோம்
கன்னியாள்
மாதாவின் கர்ப்பத்தில் தோன்றிய
கர்த்தர் பிறந்தார் தொழுவத்திலே
எண்ணி லடங்காத எத்தனை அற்புதம்
எங்கள் பிரானவர் செய்தனரே!
ஏழைக்
குதவிட ஏணிபோ லெம்பிரான்
ஏத்தியே வைப்பாரே எம்நிலையை
ஆழிக் கடலிலும் ஆழமாம் அன்பினை
ஐயன் விதைத்தார் அகிலத்திலே!
சோடினை
செய்யுங்கள் சோகம் மறவுங்கள்
சொர்ப்பனம் காணுங்கள் யேசுவையே!
ஆடி மகிழுங்கள் அன்பைப் பெருக்குங்கள்
இன்பம் பெருகும் இதயத்திலே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்