பாலன் பிறந்தநாள்

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 

(குறள்வெண்பா)

த்தார் தினத்தில் நலங்கள் திகழ்ந்தாலே
சுற்றம் கொடுக்கும் சிறப்பு !

கூடிப் பிரார்த்தனைக் கூட்டம் உருகிடப்
பாடும் உணர்வே பரம்!

நத்தாரில் வான்பொய்க்க நற்பயிர்கள் தீயாகச்
சற்றேனும் உண்டாகா சால்!

கிறித்துப் பெருமானின் கொஞ்சுங் கருணைத்
திருப்பலி காட்டும் திசை !

பாலன் பிறந்தநாள் பற்றும் வழிபாடு
ஞாலம் விளங்கவரும் நாடு!

நிலத்தைப் பறித்து நெறியைப் பறித்து
குலத்தை அழிப்பதெலாம் கேடு !

வன்மங் குவிய வருத்தம் படைத்தாயேல்
சென்மம் கொடுக்கும் துயர்!

முற்றும் துறந்து மிடிமை யடைந்துவிட
நட்புக் குலைந்துவிடும் நாடு!

பாலன் பிறந்த பவித்திரமே நத்தாராய்க்
காலத்தில் ஆகும் கனி!

கோவில் அருளும் கொடுமை அகன்றோடும்
தேவன் தருவானே தேன் !

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்