கிறிஸ்துமஸ் சிறப்பு ஹைக்குகள்
முனைவர் வே.புகழேந்தி,
பெங்களூரு
பரஸ்பரம் நலம் விசாரித்திடும்
இன்னும் விற்பனையாகா
கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல்கள்.
பியானோ கட்டைகள்
பிரதிபலிக்கின்றன
பூமகனின் பாடுகள்
மன்னிக்கிறார்
பாதிரியார்
விலைமகளின் பாவங்களை.
ஒளிர்ந்திடும் ஒற்றை நட்சத்திரம்.
திரும்புகையில்
நிரம்பிடும்
கிறிஸ்துமஸ் தாத்தாவின் பை.
பிள்ளைகளின் அன்பினால்.
நல்ல மேய்ப்பன்
தேவாலயத்தை
கடந்துச் செல்கிறது
ஆயனில்லா ஆட்டுமந்தை.
தென்றலாக உருவாகிறதாம்
சிலுவை கோபுரத்தை தாக்கிய
சூறாவளி.
கடும் பனிப்பொழிவு
தேவாலயத்திலேயே தங்கிடும்
கிறிஸ்துமஸ் கீதங்களின் நாதம்.
தேவாலய மணியோசை
நிறைவுப் பெறுகிறது
கோபுர புறாக்களின் தியானம்.
அனாதை இல்லத்தில்
கிறிஸ்துமஸ்
பிள்ளைகளுடன் நடனமாடுகிறார் சாந்தா கிளாஸ்
வேடமணிந்த ஆண்டவன்.
இனிக்க மறுக்கிறது
இந்த வருட கிறிஸ்துமஸ்.
இனிய மகள் கணவன் இல்லத்தில்.
கேக்கை வெட்டிய
கிறிஸ்துமஸ் மாதக் குளிர்.
இறைமகன் பிறப்பின் கொண்டாட்டம்.
கிறிஸ்துமஸ்
திருப்பலியில் தையல்காரர்.
விடாமல் வாட்டுகிறது
தைக்காத ஆடைகளின் நினைவு
வளர்பிறை இரவு
தொலைவில் கிறிஸ்துமஸ் கீதங்கள்
வழிநடத்திடும் வால் நட்சத்திரம்.
நள்ளிரவில்
ஒளியிழக்கிறது
கிறிஸ்துமஸ் மரத்தை
சுற்றிடும் மின்மினி.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|