கர்த்தராய் வந்துதித்தார் காண்
கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
பிள்ளைப்
பெறாதபெண்மை யொன்றுதாய் ஆனதே
வள்ளல் வரகுணனை வாரி அணைத்ததே
வித்தகமா சோதியை, விண்ணின்று வந்தபிள்ளை
நத்தாரின் நாயகனை நாடு!
அட்டூளியம்
ஆணவம் ஆதிக்கம் அத்துமீறல்
பட்டொழிந்து பாதகர்கள் பாரினிலே - கெட்டொழிய
நத்தார்த் தினத்திலே நாயகன் யேசுபிரான்
கர்த்தராய் வந்துதித்தார் காண்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|