மோனைக்கூ
கவிஞர் அன்பழகன்ஜி
அடிமேல் அடி
அழிந்து விடுகிறது
அடியில் பட்ட அடி
குலுங்கக் குலுங்க
குதித்தது எழுகிறது பூமி
குதிரைச் சவாரி.
ஒலிபெருக்கிச்
சத்தத்தில்
ஒளிந்து கொண்டான்
ஒண்டி கருப்பன்.
பிச்சை எடுத்து
பிழைப்பு நடத்துபவள் வைத்துள்ள
பிள்ளை யாருடையதோ?
சுழலும் பூமியோடு
சேர்ந்து
சுற்றிக் கொண்டிருக்கிறது
சுற்றாத மின்விசிறி
பாலைவன வெளி
பரவிக்கிடக்கிறது
பால் நிலவொளி
பறிப்பதற்குள்
பறந்து போனது
பட்டாம்பூச்சி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்