மோனைக்கூ கவிதைகள்
கவிஞர் சீனு
செந்தில், காட்டுமன்னார் கோயில்
காதல் மோகம்
காதலியைத் தேடுகிறது
கண்ணின் பாவை
பசி மயக்கம்
படி படியாய் ஏறுகிறது
பட்டினி சாவின் எண்ணிக்கை
தூண்டில் தக்கை
துடி துடிக்கிறது
தூண்டில் காரனின் மனசு
காத்திருந்த காதல்
கண்ணில் நீரை வரவழைக்கிறது
காதலியின் இறப்பு செய்தி
அம்மாவின் பாசம்
அதிகமாய் இருக்கிறது
அப்பாவின் கண்டிப்பு
குடிநீர் பிரச்சனை
குறையவே இல்லை
கூட்டத்தின் எண்ணிக்கை
உதிரும் பூக்கள்
உதிராமல் இருக்கிறது
ஓவியக் கண்காட்சியில்
அதிகாலை சூரியன்
அழகாய் தெரிகிறது
அசையும் வெண்மேகம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்