புத்தாண்டு விசேஷ ஹைக்கூகள்

முனைவர் வே.புகழேந்தி, பெங்களூரு


 

ுத்தாண்டில் வாழ்த்துகிறாள்
மகனின் மனைவிக்கு
முதியோர் இல்லத்து தாய்.

திர்ந்து விழுகின்றன
புத்தாண்டு டைரியை திறக்கையில்
பழைய நிறைவேறாத் தீர்மானங்கள்.

ெருவில் விழுந்திருக்கும் காட்சி
நள்ளிரவில் புத்தாண்டைக் கொண்டாடிய மது புட்டிகள்.

ழைய பேப்பர் கடைக்காரர்
வீட்டினுள் நுழைகிறது
புத்தாண்டின் முதல் கதிரொளி

புத்தாண்டைக் கொண்டாடி
விடைப் பெறுகிறது
முதல் மழை.

ண்டெடுக்கப் படுகிறது
பூகம்ப இடிப்பாடுகளிடையே
டிசம்பர் -31 ல் கிழிப்படா காலெண்டர்.

ிரசவ வலி
கடும் போராட்டத்திற்கிடையே
பிறக்கிறது புத்தாண்டு.

கொண்டாகிறார்கள்
பிறப்பது எந்த ஆண்டென்று அறியாமல்
சிறைக் கைதிகள்.

மாற்றத்தில் பிள்ளைகள்.
எதிர்வரும் ஆண்டையும் வரவேற்கிறார்
எழுதா உயிலுடன் படுக்கையில் அப்பா.

ுபமுகூர்த்த தேதிகளை
மனப்பாடம் செய்கிறாள்
காலண்டரில் முதிர்க்கன்னி.




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்