புதியதோர் உலகம் செய்வோம்
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
அன்பினால்
இணைந்த நெஞ்சம்
அருந்தமி ழூறும் செஞ்சொல்
முன்புறக் கொண்ட முந்தை
முத்தமிழ் தொடுத்த சிந்தை
மன்புகற் கனடா நாடும்
மண்ணினிற் தவழ்ந்த வீடும்
இன்புறப் பெற்றோம் என்றால்
இறையருள் அதுவே யாகும்!
வஞ்சியாம்
தமிழாற் கொஞ்சும்
வரிவளைக் கரத்தாள் விஞ்சும்
பஞ்சணைப் புரத்தே வாழும்
பயிர்ப்பினால் ஒருங்கே யானோம்
அஞ்சலே யான வாழ்வில்
அடைக்கலம் கொடுத்த மஞ்சில்
தஞ்சமே பயில்கின் றோமே
தமிழ்எமக் களித்தாள் தானே!
கல்வியே
இழந்த போதும்
கடிமனம் துடித்த போதும்
வல்லதோர் உலகம் தன்னில்
மறுப்பிலார் உவந்த போதில்
எல்லையே இல்லா மைந்தர்
இயற்கலை படித்தே நின்றார்!
முல்லையாம் பூக்கள் போலும்
முதனிலை பெற்றார் காண்மின்!
இன்றுஓர்
ஆண்டு வி;ட்டு
இன்னொரு ஆண்டு பெற்றோம்!
என்னருஞ் சமுதா யத்தின்
இந்தவோர் பொழுதில் நன்றாம்
முன்னிலை படைத்த உங்கள்
முதற்பணி உலக முற்றும்
மன்னரின் பணியாய்க் கொண்டு
வறுமையை நீக்கு வீரே!
கனடியம்
வகுத்த உங்கள்
வாழ்வியல் மகிழ்கின் றேனே!
அனையபொன் னறிவி னூஞ்சல்
அடக்கமும் பெற்றோம் வாழ்க!
எனதுநல் நண்பர் தம்மின்
இப்புவி தனிலே யாங்கண்
மனதுதொடும் இருந்த நாட்கள்
மறுபடி உதிப்ப தாக
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|