ஹைக்கூ
கவிதைகள்
விக்னா பாக்கியநாதன்
உடல் உதிரிகள் நம்மண்ணிலே
தானமாக எடுத்து வாழ்ந்திடுக!
உலகமே! ஏம்மின உதவிகள்
பட்டாசுச் சத்தம் தொடர்கிறதே
நித்தம் கைப்பொங்கலா?
துயிலெழுந்த சிறுவன் மனதிலே
மருத்துவப் படிப்புக்கு
உடல்கள் தேவையயா?
ஓடிவா! தமிழீழத்துக்கு
குண்டுவீச்சில் சிதறிய உடல்
பொறுக்கித்தா! அது அம்மா!
பார்க்க சிறுமியின் ஓலம்
அணிமணி அற்றோர் நாம்
அணிகின்றோம் கொத்தணிகள்
பார்க்க முடியவில்லை
தீக்குளித்த தியாகிகள்
ஓங்கிய தீ வெளிச்சம்
உண்மைகள் தெரிதல்
கூடு போகும் காகம்
குகை செல்லும் சிங்கம்
விண் நாடும் தமிழினம்
ஒரு நாள் உண்ணாநோன்பு தான்
கடினத்துடன் கழித்தல் இங்கே
நாளாந்தம் பட்டினி தமிழீழத்தில்
அடுக்கடுக்காய்ப் பிள்ளைகள்
அனாதைகள் போன்ற நிலை
வேலைக்கு ஓடும் பெற்றோர்
ஆடிமேலடிக்கு நகரும் அம்மி
குண்டுமேல் குண்டு தமிழினத்தில்
மனம் அசையாத உலகு
கற்பித்தலுக்கான ஆயத்தங்கள் பல
மாணவர்களின் அசட்டை
ஆசிரியர் மணமோ உலைக்களம்
|