ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் அன்பழகன்ஜி
நவீன
வேளான்மை
காணாமல் போனது
ஏர் கலப்பை.
குரங்குகளின் தாவல்
இறங்கி ஏறுகின்றன
மரக்கிளைகள்.
புலியை கூண்டிலிடைத்து
இறைச்சிக்காக வெட்டப்படும்
வெள்ளாடுகள்.
பாயும் மான்
பார்க்கக் கொடூரம்
துரத்தும் சிங்கம்.
ஆழிப் பேரலையில்
அதிவேகமாய் நீந்துகிறது
எமனின் எருமை.
ஒளியத் தேடியோடி
கடைசியாய் தென்பட்டது
மரணக்குழி
பலத்த மழை
நடுக்கமின்றி நனைகிறது
நடுக்கடல்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்