ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் "இளவல்"
ஹரிஹரன்,மதுரை
பிறக்கும் பொழுதே
கடன் சுமைகளின் நினைவுகள்
புத்தாண்டுத் தினம்
மீண்டும்
புதுப்பிக்கப்படுகிறது
மறந்து போன மன உறுதிகள்
புத்தாண்டுத் தினம்
ஒன்றும் குறைவில்லை
ஒவ்வோராண்டும்
குவியும் வாழ்த்துகள்
ஓடும் தொடரியில்
பின்னோடும் காட்சிகளாய்
கழிகிறது காலம்
ஒவ்வொரு நாளும்
ஏற்கிறது தண்டனை
கிழிபடும் நாட்காட்டி
கழிக்க மனமின்றி
கடந்தாண்டு நாட்காட்டி அட்டைகள்
கடவுளர் திருவுருக்கள்
இளைத்துக் கொண்டே
வருகிறது
ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக
தொங்கும் நாட்காட்டி
ஆண்ட்ராய்டில வராத
மகிழ்ச்சி கிடைக்கிறது
அஞ்சல் அட்டை வாழ்த்து
நரை கூடிக்
கிழப்பருவம் எய்துகிறது
கிழிபடும் தினமும் நாட்காட்டி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்