பிரபஞ்சனின் பிரிவால்  துயருறும் கனடியத் தமிழன்

அருட்கவி ஞானகணேசன்
 

ன்பான அறிஞனாய் அவையெலாம் முந்திய
        பொன்னான எழுத்தாளன் பூமியை விட்டே
சென்றார் எனும்சேதி தமிழனுக் கிடியே!
        என்னே ஆற்றல் எத்தனை அறிவு
முன்னாள் தந்த முத்தாம் மலர்கள்
        முத்தமி ழுலகின் முதிர்ந்த சொத்தே!
கண்முன் எழுதிய கல்விக் கூடமே
        விண்ணிலும் வரைகநீ! வித்தகா சாந்தி!

புதுச்சேரி மண்ணின் புதையலே சாரங்கா
        புவியது உரித்தென ஈன்றநல் மைந்தா
மதுக்கடைத் தந்தையின் மகனாய்ப் பிறந்து
        மகிமை புகட்டிய மகோன்னதன் நீயே!
புதுப்புதுக் கருத்தெலாம் புகுத்தியே மக்கள்
        பூரித்து வியந்தநல் பைந்தமிழ் வேந்தே
மதித்திறன் இறைவன் மகிழ்வொடு தந்தே
        மறுபடி அழைத்தனன் மன்மதா சாந்தி!

ட்டங்கள் குவித்த பைந்தமிழ் முத்தே
        பாரெலாம் உன்பெயர் பசுமையாய் மிளிர
எட்டநீ செல்கினும் ஏணியா யிருந்து
        எழுதிய எழுத்தெலாம் எம்மினச் சொத்தே!
இட்டமாய்ப் படித்தோம் இனியநற் கதைகள்
        ஈர்த்திடும் சொற்பதம் ஈட்டினாய் புகழை
கட்டழ கானவா கருத்தினைக் கவர்ந்த
        கன்னித் தமிழனே சாந்தி! சாந்தியே!
 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்