வெற்றுப் பிணம் நாம்

வித்யாசாகர

மனதின் -
நீள அகலங்களில்
எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்;

வெளியில் தெரியாமல்
உள்ளழுத்தும் வலிகளுக்கு
எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை;

எதையோ தேடி
யாரையோ நினைத்து
எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில்
அழுதுவிடாத வருத்தங்கள்
சுடத் தான் செய்கின்றன;

வெற்றியை தலைமேல் சுமந்து
எத்தனை தெருக்களில்
நடந்துத் திரிந்தாலும்
தோற்கும் வினாடிகள்
வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை;

என்ன வென்று..
என்ன சிரித்து..
என்ன மகிழ்ந்தென்ன
உயிரற்று வீழுகையில்
வெறுங்கட்டையாய் எரியும்
பிணம் தானே நாமெல்லாம்???



vidhyasagar1976@gmail.com