பிரபஞ்சன் பெயரோன் வைத்திலிங்கம்

புலவர் முருகேசு மயில்வாகனன்
 


பிறப்பாலே புதுச்சேரி பெயரோ வைத்திலிங்கம்
சிறப்பான கல்வியால் சிறந்த புலவனாய்
நல்லா சிரியனாய் நலிந்தோரின் கல்வியாளன்
பிரபஞ்ச உலகிலே பிரபஞ்சன் பெயர்பெற்றாய்
பத்திரிகைத் துறையிலும் பக்குவமாய்ச் செயறபட்டுச்
செந்தமிட் கோர்சிற்பி சிறந்த எழுத்தாளன்
சிந்தை கவரும் சிந்தனை யாளன்நீ
சுயமரியா (தை) இயக்கத்தில் இணைந்துமே ஈர்ப்பாக
நயமாகப் பணிசெய்து நற்பெயர் பெற்றனையே
சுயமாகச் சிந்தித்து சூழலுக் கேற்பாக
நாற்பத் தாறுநூல் தந்துமே நல்விருது
பலபெற்று நற்றமிழால் உயர்ந்தே நின்றாய்
கூற்றுவன் கவருமுன் கூடுதல் விருதுனக்கு
செந்தமிழ்த் தாயவள் சிறந்ததோர் மைந்தனை
இந்நாள் இழந்தே ஏங்கித் தவிக்கிறாளே
இறப்பும் பிறப்பும் இருபக்க மென்றேதான்
பிரபஞ்சப் பேராளன் பெருமையுடன்
இறைவன் திருவடி ஈர்ப்பாகச் சேர்ந்தானே.


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்