புதுச்சேரி தந்தமகன், புலமைமிகு
'பிரபஞ்சன்'
கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
வறுமையிலே
வரண்ட வற்றாத 'ஜீவநதி' - அவன்
திறமையிலே உயர்ந்து தான்வளர்ந்த தங்கமகன்
பொறுமைமிகு பிள்ளைவன் பொதிகை மலைத்--தென்றல்
சிறுவயதில் கற்றுயர்ந்த சிரஞ்சீவி வைத்திலிங்கம்
ஆசிரியர்,
எழுத்தாளர், அழகுகவி, அற்புத - விமர்சகர்
பேசுநயம் பெற்றெழுந்தான் 'பிரபஞ்சன்' புனைபெயரில்
வீசுபகழ் ஆனந்த விகடன் வித்தகக் - குமுதம்
வாசகர் மத்தியிலே வானுயந்து நின்றனனே
'என்ன
உலகமெடா' சிறுகதை வாசகரைப் - பின்னி
உன்னி உணரவைத்த உயர்ந்த படைப்பாகும்
கன்னல் மொழிநடை காந்தக் கருத்தழகு - பிரபஞ்சன்
இன்னல் இடரெல்லாம் எழுத்தாக மலர்ந்தனவே!
ஞானம் சிறந்த
நாற்பத்தாறு நூல்கள் - படைத்தான்
'வானம் வசப்படும்' சாகித்திய விருதுபெற்றது
தேனொத்த படைப்புகள் பாடப் புத்தகங்கள் - ஆயின
'நேற்றுமனிதன்' கல்லூரிப் பாடநூ லாச்சே!
இந்தி,
தெலுங்க, கன்னடம், பிரான்சு - யேர்மன்
வந்து வரவேற்றே, ஆங்கிலம் சுவீடன்
வந்தனை கூறி விருப்புடன் மொழிபெயர்த் - தனவே
சிந்தனையைப் பாராட்டி விருதுகள் தந்தனவே!
பொன்மகனே!
பிரபஞ்சனே! புண்ணியனே உன்னைப் - பெற்ற
அன்னை தவமதனை அகிலமே போற்றுதடா!
தன்னிகர் அற்ற தனிப்பெரும் எழுத்தாளனே - தாய்நாடு
சென்னியில் வைத்துன்னைச் சேவிக்க மறவாதே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|