கலையாது காத்தல் கடன்

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்

ல்வியொடு செல்வமது கைவந்து வாழ்க்கையிலே
இல்லையொரு துன்பமென எண்ணிநாம் வாழ
நிலையாய்த் தமிழுணர்வை நெஞ்சமதில் ஏற்றுக்
கலையாது காத்தல் கடன்.

ேற்றினத்துப் பண்பாட்டில் வீழ்ந்தே மடியாமல்
போற்றித் தமிழுணர்வைப் பொன்போன்று காப்போம்!
தொலைத்தோம் என்றால் தொலைந்தோமென் றோர்ந்து
கலையாது காத்தல் கடன்.

ன்பான வாழ்வை அறிவான நட்புறவை
பண்பான நற்குணத்தை பாரினிலே எந்த
மலைபோன்ற துன்பங்கள் வந்தணைந்த போதும்
கலையாது காத்தல் கடன்.

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்