ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் ச.கசேந்திரன்
 




ரோஜாவை இரசிக்கிறார்கள்
புற்களை மிதித்தபடி
பூக்கள் வாடிவிழுகின்றன!

ூங்கா நிறைய மனிதர்கள்
பொழுது கழிகிறது
பூக்களில் வண்ணத்துப்பூச்சிகள்

ார்குழல் அசைகிறது
மேற்றிசைக் காற்றில்
கருமுகில்கள் கூடுகின்றன

ிளக்கேற்றுகிறாளவள்
சுற்றும் பூச்சிகள்
நிமிர்ந்தெரிகிறது சுடர்

மீன்களோடு கரைவருகிறார்கள்
படகுகளில் மீனவர்கள்
காத்திருக்கும் கொக்குகள்

ொண்டாடுவோரைக் குடித்து
மதுப்புட்டிகள்
விழாக் கொண்டாடுகின்றன!

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்