குழந்தையின் ஓவியம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
கிறுக்கல்கள்
அல்லஅவை குழந்தை நெஞ்சுள்
கிளர்ந்தெழுந்த கருத்துகளின் கோட்டெ ழுத்து
முறுக்குகளை பிழிந்தபோன்ற கோடெல் லாமே
மூளைஉள் வாங்கிட்டக் காட்சிக் கோலம்
எறும்புகளைப் போன்றதலைப் புள்ளி யெல்லாம்
எழுத்துகளை வடிவமைக்கும் முயற்சித் தோன்றல்
கறும்பலகைப் படிப்பிற்கே அணிய மாகக்
கரித்துண்டால் வரைந்திட்ட ஓவி யங்கள் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|