உன் வருகைக்காக
பிரதீபா, பாண்டிச்சேரி
கதிரவன் முகம் பார்த்து
நாணமுற்று
ரோஜாக்கள் சிவக்க
அவ்வழகில் மயங்கிய
தேனீக்கள் அதனுள்
தேன் உண்டு களிக்க
மலரினும் மெல்லிய
இறகுகள் கொண்ட
வண்ண வண்ண
வண்ணத்துப்பூச்சிகள்
சிறகடித்துப்பூங்காவெங்கும்
பறக்க அவைகளுள் ஒன்றாக
என் மனமும்
பறந்து திரிந்து
ஆர்ப்பரித்தது
உன் வருகைக்காக காத்திருந்த
ஒவ்வொரு விநாடியும்...
bradipagen@yahoo.com
|