பார் போற்றும் நம் மகாத்மா

கவிஞர் நம்பிக்கை நாகராஜன், கோவை
 


ளியோரின் நினைவொன்றே நிறைவாய் என்றும்
       எப்போதும் கொண்டிருந்தார் எங்கள் காந்தி
துளியேனும் குறைகாணா அன்பை நம்முள்
       துணையாக வைத்தவர்தான் அன்னல் காந்தி
வளியென்றே பாரதத்தில் அகிம்சை என்றோர்
       வடிவத்தில் விடுதலைக்காய்த் துன்பம் கொண்டார்
வெளிநாட்டார் இவர்செயலை வியந்து நிற்க
       விடுதலையை முன்வைத்தார் 'அன்னல் காந்தி'

ிறையவேண்டும் கிராமத்தில் பொருளா தாரம்
        நிறைந்துவிடும் உயர்ந்துவிடும் நாடே என்றார்
அரைஅளவே ஆடைகொண்ட வறியோர் கண்டு
       அகம்நொந்து அரைஆடை நிலையில் வாழ்ந்தார்
சிறையிலிட்டார் அடக்குமுறை கொடுமை கண்டும்
       சிந்தனையால் அகிம்சைவழி போர்கள் செய்தார்
மறைகூறும் வாய்மையெல்லாம் தன்னுள் ஏற்று
       மனிதனென்று வாழ்ந்ததெய்வம் 'மகாத்மா காந்தி'

ற்றறிந்த வழக்கறிஞர் என்றே தன்னை
       காட்டுதற்கே என்றுமவர் இருந்தார் இல்லை
சுற்றிவந்து எளியமக்கள் துன்பம் தீர
       சத்தியத்தின் சோதனைக்குள் தன்னைத் தந்தார்
பற்றியதோர் கொடுமைகண்டே களத்தில் நின்றார்
       பாரதத்தின் விடுதலைக்காய் வேகம் கொண்டார்
பற்றிடுவோம் காந்திசென்ற பாதை வெல்க
       பார்போற்றும் நம்மகாத்மா 'காந்தி வாழ்க! வாழ்க!'

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்