சத்திய வேந்தன் காந்தி
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
போர்த்திய கதர்என் ஆடை
பொல்லொரு ஊன்று கோலாம்
ஆர்த்தவர் ஆங்கி லத்தும்
அர்ப்பணித் திடுமோர் பேச்சின்
சேர்த்திடும் இந்திய யத்தின்
சொல்லரும் மொழிகள் பல்லாய்க்
கோர்த்தவர் கரம்சந் காந்தி
குலவிடும் மேதை யானார்!
இந்திய விடுத லைக்கும்
ஏனைய மொழிகட் குள்ளும்
சிந்திய இரத்தம் இன்றிச்
சேர்புவி அனைத்திற் குள்ளும்
மந்திரம் ஒன்றில் லானாய்
வருமொழி உரைப்பா னாகி
எந்திரப் பொறியே என்க
ஏற்றினார் விடியற் தீபம்!
இந்தியக் குடிகள் ஆட்சி
இயம்பிய தலைவர், நாட்டின்
மந்திர வடிவ மென்க
மாற்றிய கரம்சத் காந்தி
சிந்தனை அகிம்சை வாதி
சிறந்ததோர் சட்ட வாளர்
உந்துதல் கொண்டு (இ)லண்டன்
உயர்கல்வி பெற்றார் தானே!
ஆயுதம் இன்றிச் சாந்த
அகிம்சையே கரத்தில் ஏந்தி
சாயுதல் செய்யா வாறே
சத்திய வேந்தன் ஆனார்
நோயுறக் கண்டார் இல்லை
நோன்பிலே விடியல் என்ற
தூயறம் சிரசிற் கொண்டார் !
தொல்லுல கெல்லாம் வென்றார் !
உப்புப்போ ராட்ட மென்ற
இந்தியச் சட்டத் தோடும்
செப்பிய வாதங் கொண்டு
சிறைசென்றார் காந்தி அண்ணல்!
இப்படிப் பலபோ ராட்டம்
இயன்றிடக் கோட்சே நத்ரூம்
ஓப்பிய சூட்டி னாலே
உயிரினை இழந்தார் அம்மா!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|