மஹாத்மா நினைவு நாள்..!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி





தரவு கொச்சகக் கலிப்பா:

ட்டுப்பால் குடிப்பாராம் அவிக்கடலை மெல்லுவாராம்.!
வீட்டுக்குள் முடங்காது விடுதலைக்குப் பாடுபட..
கோட்டைக்க ழற்றினாயே கச்சையொன்றே அணிந்தாயே.!
நாட்டுக்கே உழைத்தாயே நம்தேசத் தந்தையாக.!

நாள்தோறும் பார்க்கிறோம் நினைக்கிறோம் அண்ணலை
வாள்கொண்டு போராடும் வெற்றியிலே கவனமில்லை.!
தோள்சரிந்து துவண்டபோது துவளாத மனமில்லை.!
மீள்பதிவு செய்யுங்கள் மஹாத்மாவை மனதினிலே.!

ண்ணமெலாம் சீர்படவே ஏற்றாயே ஒழுக்கத்தை.!
மண்ணுலகில் உதித்தவருள் மஹாத்மாவாய் ஆனாயே.!
எண்ணற்ற இந்தியரின் எண்ணத்துள் நிறைந்தவனே.!
விண்ணுலகு சென்றாலும் விலாசமுமே வேண்டாமே.!

 


 


 

 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்