புத்தன் சிரித்தான்...

அ.இளஞாயிறு 

கொலை வாள்களுக்கிடையே
புத்தன்.
இறுதி ஆசையைச் சொன்னான்.
 
அந்த மரத்திலிருந்து
ஒரு இலையை கிள்ளி வா.

கிள்ளி வந்தான்.
ஒரு கிளையை ஒடித்து வா.
,
ஒடித்து வந்தான்.
ஆசையின் இறுதிப் ப‌குதி
கிள்ளிய‌தையும்
ஒடித்த‌தையும்
அதே இட‌த்தில் கொண்டு வை !
புத்த‌னே உன‌க்கென்ன பைத்திய‌மா
?
முடியாத‌தை சொல்கிறாய் !
புத்த‌ன் சிரித்தான்
,
சொன்னான்
,
அழித்த‌ல் எளிது
ஆக்குத‌ல் அரிது !
 

aatruneer@gmail.com