ஹைக்கூக்கள்.

முனைவர் வே.புகழேந்தி, பெங்களூர்
 

னாதை இல்லத்தில்
அடைக்கலம் அடைகிறதாம்
அறுசுவை உணவு.


தினெட்டாம் படியேறியும்
தரிசனம் கிடைக்கவில்லை.
அறுபதாம் படியில் அப்பா.

தோல்வியை ஒப்புக்கொள்ளும்
குழந்தை மீண்டும் அழுகையில்
தாலாட்டு

ாகனத் தடைக்கம்பி மேலெழுந்ததும்
மெல்ல நகர்கின்றன
மேகங்கள்.

ுவரில்லாச் சித்திரம்
ஒதுங்கிச் செல்கின்றன
வாகனச் சக்கரங்கள்.

ளியை உமிழ்ந்திடும்
இருளை உறிஞ்சிய
எண்ணெய்.

ீண்டும் பிறக்கிறது
அடைமழை பொழிகையில்
மேகம் காணும் ஆசை.

காத்திருக்கிறது
தெருக்கோடியை தேர் கடக்கும் வரை
இறுதி ஊர்வலம்.

நீரில் விழுந்த இலைமேல்
திடீர் பயணம்
மேகத்துண்டு.

ுழந்தை தூங்கி எழும் வரை
சூழ்ந்து காப்பாற்றியவாறே.....
சாம்பிராணிப்புகை.


மோனை (ஹை) க்கூக்கள்

துளசி மாடத்தை
தொடர்ந்து சுற்றி வரும்
துணைவியின் கூந்தல் நீர்

ழை வில்லை
மனம் இரசிக்கையில்
மீண்டும் தூறல்.

ரக்கு வண்டி பெட்டிகளின்
சரதியை எண்ணுகிறேன்
சட்டென தொடர் பயணிகள் வண்டி

ெல்ல அவிழ்க்கிறது
மல்லிகைக்கொடியை சுற்றிய
மணத்தை பட்டாம்பூச்சி.

மை புகுந்த வீடு
அலட்டிக் கொள்ளவில்லை யாரும்.
அடை மழை வெள்ளம்.

னக்கலவரம்
இரண்டாம் நாளே ஓய்கிறது
இடைவிடா மழை.

டிக்கட்டுகள்
பராமரிக்கப் படுகின்றன
பால்நிலவை இனி தரிசிக்கலாம்.

றப்பதை மெல்ல மறக்கிறது
பாலகனின் கையில் சிக்கிய
பட்டாம் பூச்சி.

ிளக்கு அணைந்ததும்
வியர்வையில் நனைகிறது
வெட்கம்.

பூந்தோட்ட ஓணான் கொடியசைத்திட
பந்தயத்தில் ஓடுகின்றன
பட்டாம் பூச்சிகள்.

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்