ஆழியாப் புகழுடையான் அஞ்சா நெஞ்சன் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

அருட்கவி ஞானகணேசன்
 


(பாவினம்)

ெள்ளைய ராட்சியை வேரொடு சாய்த்து
விரட்டிக் கலைத்தவர் காந்தியரே!
துள்ளும் இளமையில் துடுக்கோ டெதிர்த்துமே
செய்திட்ட போராட்டம் எத்தனையோ!

றவழிப் போராட்டம் ஆடியே வென்றவர்
அத்தனை மக்களின் அன்புமகன்
திறமை மிகுந்தவர் தீர்க்க தரிசனம்
திட்டம் அமுலாக்கும் தன்மையரே!

ுத்திலி பாயவள் புத்திரன் மோகன்தாஸ்
புத்தியில் மிக்கதோர் மாவீரனே!
சத்(தி)யாக் கிரகம் சாத்விகப் போராட்டம்
செய்தவர் கண்டார் சுதந்திரமே!

ஸ்தூரி பாயினைக் கல்யாணம் செய்துமே
கண்ணிய வாழ்வினைக் கண்டனரே
வஸ்த்திரம் எந்நாளும் வளமாம் கதரென
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தனரே.

ட்டங்கள் கற்றுமே சட்டத் தரணியாய்
சாதனை எத்தனை செய்துநின்றார்
இட்டமாய் சூழ்ந்தார் இளையோ ரிவர்பின்னே
ஈட்டிய வெற்றியு மெத்தனையோ.

ெள்ளையன் ஆடையும் வேறெந்தப் பண்டமும்
வாங்காது போராட்டம் செய்தனரே!
பள்ளிகள் மன்றம் பலவும் மறுத்திட
பாரதம் பெற்றது சுதந்திரமே!

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்