உயிரும் உணர்வும் தமிழே!

கவிஞர் கே.பி.பத்மநாபன்
 


ற்புணர்வை, காவலனின் நெறியுணர்வை,
       காற்சிலம்பால் உயிராய்க் காட்டி,
அற்புதமாய்ப் பசிநீக்கும் அருளுணர்வை
       மேகலையால் தாய்மை யாக்கி,
நற்புறத்தோ(டு) அகவுணர்வை நானூறு
       நானூறாய் நன்கு ணர்த்தி,
பற்பலவாய் உணர்வுகளைப் பாரிலுயிர்ப்
       பித்தமொழி எம்த மிழ்தான்!

குறள்நெறியே உயிரீயும் கோதற்ற
       குருதியென வாகி, நல்ல
அறநெறியின் உணர்வூட்டும் ஒளவையுடன்
       நாலடியும், மேலும் வீர
மறவுணர்வும், மானுடத்தின் உயிர்மனிதம்
       பாரதியால் உயிர்மூச் சாகிப்,
பிறந்திட்ட தமிழர்க்கிங்(கு) உயிருணர்வு
       யாவையுமொண் டமிழே அன்றோ?


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்