ஹைக்கூக்கள்.

முனைவர் வே.புகழேந்தி, பெங்களூர்


விடுதலை அடைகிறான்
இளமையை தவற விட்டு
ஆயுள் கைதி.
 



தீவிர வேண்டுதல்
கவனத்தை கலக்கிறது
ஆலய மணி.

ந்த ஆலைச்சங்கு
அப்பாவுக்காக அல்ல.
நேற்றே பணி ஓய்வு.

முந்தைய தொடர்வண்டி
விட்டுச்சென்ற மௌனத்தை
கலைத்தவாறே மற்றொரு தடக்..தடக்...

சிறை கம்பிக்கு வெளியே
துரு பிடித்து விடுகிறது
நீண்டநாள் நட்பு.

சுயநல பிரார்த்தனைகள்
உதடுகளின் படைப்புக்காக
வருந்திடும் இறைவன்.

தூங்கும் குழந்தையை
சுற்றி வளைத்து காப்பாற்றிடும்
சாம்பிராணி புகை

ன்னும் வாடவில்லை
இலையுடன் உதிர்ந்த
நிழல்.

னக்கவில்லை
மோர்க்காரிக்கு
பானையின் மேல் பட்டாம்பூச்சி.
 




றங்கும்போதே
இடம் பெயருகின்றன
பெருங்காற்றில் பறந்த இலைகள்.

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்