சர்வதேச தாய்மொழி தினம்..!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி
 


ங்கிலத்தை அனைவருமே விரும்பு வார்கள்
        அவரவர்க்குத் தாய்மொழியும் அவசி யம்தான்
ஆங்காங்கே தோன்றுகின்ற விளம்ப ரத்தால்
       அன்னைமொழி ஆபத்தில் அழியும் சூழல்.!
ஓங்குகின்ற தாய்மொழியின் வளர்ச்சி குன்றா
       ஓய்விலாமல் உழைப்பீரே உயரு தற்கு.!
பாங்காக பாத்தமிழில் பாட்டி யற்றி
       பார்புகழத் தாய்மொழிக்குத் தொண்டு செய்வீர்.!

தாய்மொழியைக் காப்பாற்றும் நினைவு கூடத்
       தானாக எழவேண்டும் தாகம் போல.!
சேய்மொழியை வளர்ப்பதற்கு சிறிய தாக
       சோராது உழைத்திடுவீர் சிந்தை மகிழ.!
வாய்ச்சொல்லில் மட்டும்தன் வீரம் காட்டி
       வாளாது இருந்திடாமல் முயற்சி செய்வீர்.!
ஏய்க்கின்ற எண்ணமுமே என்றும் வேண்டாம்
       இன்றைக்கே தாய்மொழிமேல் பற்று கொள்வீர்.!

ழந்தமிழர்ப் பெருமைகளை அறிவ தற்கு
       பிரபந்தம் பதிகங்கள் கற்க வேண்டும்.!
அழகுதமிழ் வீழ்ந்திடாமல் அரவ ணைத்து
       ஆங்காங்கே செந்தமிழைச் சிறக்க வைக்க.!
புழங்குகின்ற இழுக்குகளை பிய்க்க வேண்டும்
       புலவர்களாய்ப் பிறவியெடுக்க சபதம் வேண்டும்.!
எழவேண்டும் எழுச்சியுடன் இளைய மக்கள்
       எம்மொழியாம் தாய்மொழியும் உய்வ தற்கு.!
 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்