உலகத் தாய்மொழி தினம்
கவிஞர் நம்பிக்கை நாகராஜன்,
கோவை
உலகத்தில்
தாய்மொழிக்கோர் பெருமை உண்டு
உள்ளத்தால் அதையெண்ணி மகிழ்வும் உண்டு
நிலந்தன்னில் ஆயிரமாய் மொழிகள் உண்டு
நினைத்திருந்து தாய்மொழியைப் போற்றல்
உண்டு
நலஞ்சேர்ந்த சிந்தனையில் தாயாய் நின்று
நல்லறிவை தினந்தந்து புகழைச் சேர்க்கும்
பலமொழிகள் கற்றிருந்து மேலாய் ஓங்க
பயிற்சிதர 'தாய்மொழிதான் முன்னால்
முந்தும்'
பன்நாட்டு
மொழிவழியே மக்கள் எல்லாம்
பார்த்திடவும் பேசிடவும் மொழியே பாலம்
தன்நாட்டு நிலமைகளைச் சொல்லிக் கொள்ள
தவறாது வணிகத்தைப் பெருக்கிக் கொள்ள
என்நாட்டு நிலைபாரு என்றே காட்டி
இனிதாக உறவெல்லாம் சேர்த்துக் கொள்ள
தென்னாட்டோர் தாய்மொழியாம் தமிழை வாழ்த்த
தேர்ந்தளித்தார் 'தாய்மொழிக்கோர்
தினத்தை' இன்று
அவரவர்கள்
தாய்மொழியை அவர்கள் வாழ்த்த
ஆவலென்றும் குறையாது அதிகம் ஆகும்
எவர்மொழியும் எல்லோர்க்கும் மகிழ்வே என்று
எண்ணுகின்ற எண்ணத்தால் உலகம் ஓங்கும்
தவறென்று நினைப்பதற்கு கருத்தே இல்லை
தன்மொழியை காப்பதிலே தடைகள் இல்லை
கவர்ந்திழுக்கும் 'தாய்மொழியின் தினத்தைத்' தந்து
கலையாது மொழிகாத்த மேலோர் வாழ்க!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|