ஹைக்கூக்கள்

கவிஞர் ஜீவா, திருநெல்வேலி
 

காதுகேளாத பெண்
தலையாட்டிக் கொண்டே ரசிக்கிறாள்
காற்றிலாடும் மூங்கிலை!!

டிக்கும் சிறுகதை
நீண்டு கொண்டே போகிறது
பால்ய நினைவுகள்!!

ந்தை சொல்லே மந்திரம்
ஏற்க மறுக்கிறது மனம்
சாராய நாற்றத்தில்!!

வர்ச்சி நடிகை
ஏக்கத்துடன் ரசித்து பார்க்கிறாள்
சேலைக்கடை பொம்மையை

ற்றில் கழிவுநீர்
கரையை நோக்கி முன்னேறுகிறது
மீன்கள் கூட்டம்!!

ணவு உண்டபின்
உடனே நினைவுக்கு வருகிறது
இன்று விரதமிருப்பது!!!

காமத்தின் வறுமைக்கோடு
கூடிக் கொண்டே இருக்கிறது
பாலியல் வன்கொடுமை!!

பிரபல இசைக்கல்லூரி
இரவில் மட்டுமே நடக்கிறது
தவளைகளின் கச்சேரி!!

செங்கல் சூளையில்
தாயுடன் சேர்ந்தே சுமக்கிறான்
தம்பியின் கனவை!!

பிரசவம் முடிந்ததும்
தவிப்புடன் காத்திருக்கிறான் கணவன்
அனாதை இல்லத்தில் !!!

டத்தப்பட் குழந்தைகள்
பத்திரமாய் மீட்டு எடுக்கிறார்கள்
உடல் உறுப்புகளை

பூங்காவின் அழகு
முகம் சுளிக்க வைக்கிறது
காதலர்களின் சேட்டை

ம்மாவின் காதல்
குறைந்து கொண்டே வருகிறது
தந்தையின் கோபம்

காதலர் தினம்
முன்கூட்டியே உறுதியாகிறது
உல்லாச பயணம்

டுப்பில் சமையல்
அடிக்கடி இசை பாடுகிறது
அன்னையின் ஊதுகுழல்

மாட்டின் வால்
தொடத்தொட அதிகமாகிறது
சலங்கையின் ஒலி

சிறுவனின் மகிழ்ச்சி
ஆற்றை கடக்கையில் மறைகிறது
கரையோர மீன்கள்

ழைத்துளி சொட்டுகையில்
தலையாட்டி ரசிக்கின்றன
கொடியில் மலர்கள்

குழந்தையின் அணைப்பு
முற்றிலும் விலகியது
அன்னையின் உறக்கம்

காவல் தெய்வம்
கெட்டியாய் பிடித்திருக்கிறது
கையில் அருவாள்

திருவிழா கூட்டத்தில்
கணாமல் போகிறது
கூத்தாடியின் பசி

வாய்பேசாத குழந்தை
திரும்பி போகச்சொல்கிறது
வாத்து கூட்டம்

காய மேகங்கள்
காற்றோடு ஒன்றுசேர விழுகிறது
மண்ணில் மழைத்துளி

ணிதத் தேர்வு
கூட்டி பெருக்குகிறாள்
ஏழை சிறுமி


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்