வாழ்வியல் ஹைக்கூ

கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்
 

நாம் நினைத்தபடி
உலகத்தை இயக்கமுடியாது
எதிர்பார்ப்பின் ஆணவம்

யற்கை ஒன்றையொன்று
போட்டியில் இறங்குவதில்லை
படைப்பின் நியதி

சூழல் தரும் சுகமெல்லாம்
புறத் தோற்றத்தின் வெளிப்பாடு
அகம் அறிந்த உண்மை

வெற்றுச் சடங்குகளால்
நல்வழி காணமுடியாது
உணர்தலில் மலரும் விடியல்

விழிப்புணர்வு இல்லாத
இதயங்களில் வேர்விடுகிறது
ஏமாற்றமும் கோபமும்

ற்றவர்கள் இன்புற
தம்மை வருத்திக்கொள்வோர்கள்
சூல்கொண்ட கருமேகம்

நிலையாமையை நன்கு
உணர்த்துகின்றன
அடுக்கப்பட்ட கூழாங்கற்கள்

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்