கண்ட நாள் முதலாய்...
கவிஞர் ச.கசேந்திரன்
அதுவொரு
பனிக்கால
வைகறை பொழுது...
ரோஜாவின் இதழில் தூங்கிய
பனித்துளிக்குள்
அவளது முகநிலவைக்
கண்ட நாள்முதலாய்..,
காந்தப்புலத்தில் விழுந்த
இரும்புத் துகளாக
அவளிருக்கும் திசைநோக்கியே
நடக்கிறேன் அனிச்சையாய்..
இளமைக்கால வசந்தம் தொட்டு
இறுதிவரையிலும்
ஒருசிறு பட்டாம்பூச்சியாக அந்த
நந்தவனத்துக்குள்
பறந்துமடிய ஆசைகொண்டு
பகலிரெவு தவம்செய்கிறேன்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|