ஹைக்கூக்கள்.

முனைவர் வே.புகழேந்தி, பெங்களூர்
 

கால் மாற்றி நிற்கையில் நாரை
தப்பித்து விடுகிறது
மீன்கள் கூட்டம்.

தோட்டப்பக்கம் சென்றறியா
அப்பாவின் புகைப்படத்திற்கு
தினமும் ரோஜா மாலை.

முதல் மழையின் அந்தத்துடன்
மறு மழையின் ஆரம்பத்தை இணைத்தவாறே மழைவில்.

ப்பாவின் நாற்காலியை துடைக்கையில்
மெல்ல வெளியேறுகிறது
தூசுடன் நினைவுகள்.

சுந்தேயிலை பயிரில் பனிப்பொழிவு
எத்தனை கோப்பை ஹைக்கூகளின்
கருச்சிதைவோ?

றுவை சிகிச்சை வெற்றி
ஆயினும் மரணமடைகிறார்
வைத்தியர் மாரடைப்பால்.

தொடர்வண்டி கடந்தும்
சரக்கு வண்டிக்காய் காத்திருக்கின்றன
சாலை வாகனங்கள்.

ள்ளி விடுமுறையென்று
யார் சொல்லி அனுப்பி வைப்பது
சத்துணவு கூடத்தில் காக்கை..

பாவின் நீண்ட உயில்
படித்து முடித்ததும் மயங்கி விழுகிறார்
வக்கீல்.

நோடா பொத்தானை அழுத்துகிறான்
ஓட்டுக்காக பலரிடம் பணம்பெற்ற
வாக்காளன்.

 



 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்