அம்மா நீ வேண்டும் மீண்டும
எங்களுக்கு...
கவிஞர் ஆ.ராஜா, பண்ணுருட்டி
ஏழு கோடி குழந்தைகளின்
தாயே!
அன்பு காட்டி தமிழகம் காத்தாயே
மாற்றாரும் போற்றும் தலைமை பெற்றாயே
சிங்கநிகர் வீரத்தை தனதாய் கொண்டாயே
அம்மா நீ வேண்டும் மீண்டும் எங்குளுக்கு....
ஏழைகளை மனதில்
வைத்தாய் அம்மா,
அவர்களை தாய்போல வாழவைத்தாய் அம்மா,
திட்டங்கள் பலதீட்டி விரட்டிவிட்டாய் வறுமையை
சட்டங்கள் பலஇயற்றி ஓடவிட்டாய் கொடுமையை
அம்மா நீ வேண்டும் மீண்டும் எங்களுக்கு....
தொட்டில்
இழந்தகுழுந்தைக்கு தொட்டில்குழந்தை தந்தாய்
பெண்கல்வி உயர்ந்திடவே ஊக்கத்தோகை கொடுத்தாய்
மாங்கல்யம் காத்திடவே தங்கத்தை அணிவித்தாய்
குழந்தை பேற்றிற்க்கு பரிசுபெட்டகமாக வந்தாய்
அம்மா நீ வேண்டும் மீண்டும எங்களுக்கு...
தமிழ்மண்ணில் தோன்றும்
உயிர்கள் அனைத்தையும்
தம்திட்டத்தால் வாழ வைத்த வரலாறே
எங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை
எதிலும் நிலைத்து உள்ளது உம்பேரே,
அம்மா நீ வேண்டும் மீண்டும எங்களுக்கு...
சரித்திர பேரொளியாய்
வாழ்ந்தாய்,
வாழ்க்கையில் போராளியாய் நின்றாய்,
பூகம்பங்கள் பலவென்று புன்னகைத்தாய்,
புரட்சிக்கு தலைவியாக முன்னெடுத்தாய்,
புத்துலகம் எங்களுக்காய் வடிவமைத்தாய்,
எங்கள் தலைவியே தங்கத் தலைவியே!
அம்மா நீ வேண்டும் மீண்டும எங்களுக்கு...
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்