அபிநந்தன் (லிமெரைக்குகள்)
முனைவர் வே.புகழேந்தி, பெங்களூர்
பாராட்டுக்கு மறுபெயர் அபிநந்தன்
பாகிஸ்தான் படையிடமிருந்து பதற்றமின்றி திரும்பியதால்
புகழ்ச்சிக்கு உரியவர் அபிநந்தன்.
அறிவித்தால்
இருநாடுகளிடையே யுத்தம்
அல்லும் பகலும் துப்பாக்கிச் சத்தம்
அப்பாவிகள் சிந்திடுவர் இரத்தம்.
இந்திய இராணுவத்தின்
தியாகத்தை
பயன் படுத்தி வகுத்திட வேண்டாம்
தேர்தல் வெற்றிக்கான வியூகத்தை.
எல்லையில் சூழ்ந்த
போர்மேகம்
என்றும்போல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம்
என்று தணியுமிவர் பதவிமோகம்?
புல்வாமா தாக்குதலே
இறுதியாகட்டும்
புதியதொரு வன்முறை தவிர்க்க கவனிக்கவும்
இராணுவத்தில் கறுப்பாடுகளின் நடமாட்டம்.
பறக்க விடுவோம்
வெண்புறாவை
பாரினில் போர்தனை பாங்குடன் தவிர்த்து
பக்கநாடுடன் வளர்த்து நல்லுறவை.
உயிர்த்தியாகம்
செய்தோர்க்கு வீரவணக்கம்
உக்கிர வாதிகளுக்கு பதிலடி கொடுத்து
ஊடறுப்போம் மக்களின் சுணக்கம்.
இப்படை
தோற்கின்வெல்வதெப்படை?
இந்தியா என்னும் போதிலே மெய்சிலிர்க்கும்
இனியடிப்போம் தாரை தப்பட்டை.
கொட்ட வேண்டும்
போர்முரசு
என்றும் தீண்டாமையும், வரதட்சணையும்
வேரறுத்து மைய அரசு.
முழங்கிடுவோம் 'வந்தே
மாதரம்'
நாட்டுப்பற்று என்னும் பெயரில் புரிந்திடும்
அரசியலோ என்றும் கீழ்த்தரம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|