மகளிர் தினம்
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
அங்கலாய்ப்பு
இல்லாது
அரவணைத்து மகிழ்ந்திடவெ
சங்கமத்தில் பொங்குகின்ற
சன்மமுமெ தந்திட்டாய்..!
இங்கிதத்தை நன்கறிந்து
இல்லறத்தை நடத்திடவே
மங்கலமாய் குலவிளக்காய்
மங்கையாகப் பிறந்திட்டாய்.!
திறத்தாலே
உயர்வுற்றுத்
தனித்தன்மை நாட்டுகின்ற
மறத்தியரின் பட்டியலில்
மறக்காத பெண்களுண்டு..!
அறத்துக்கு அடையாளம்
அவர்களுக்கே முதலிடமாம்
இறந்தாலும் பெண்ணன்பு
என்றைக்கும் மாறாது..!
மங்கைக்கோர் நன்னாளாய்
மண்ணுலகில் கொண்டாட
தங்கையாக தாயாக
தாரமாகும் பெண்ணினமே..!
எங்களுக்கும் ஆதரவாய்
எவ்விடமும் செழிப்பதற்கே
பங்களிப்பாய்ப் பெண்ணாகப்
பகையிலாத உணர்வாக.!
உருவாக்கும்
சக்திகொண்ட
உன்னதமாம் பெண்ணினத்தை
கருவிலேயே அழிக்கின்ற
காரியத்தைச் செய்கின்றார்..!
அருகிவரும் பாலினமாய்
அண்டத்தில் ஆகிடுமோ..?
பெருகிவரும் கொடுமையினிப்
பெண்மைக்குச் செய்யாதீர்.!
மகளிர் தினம்: 08-03-2019
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|