துளிப்பாக்கள்

கவிஞர் ஜீவா,  திருநெல்வேலி


மாலை நேரம்
மேகக் கூட்டத்தோடு நகர்கிறது
பகலின் வெளிச்சம்

ருவான கரு
பிடிக்காமல் போனது
அருஞ்சுவை உணவு

டர்ந்த காட்டை
ஊடுருவி பார்க்கிறது
சூரிய ஒளி

ரைதேடும் பறவை
இலக்கை சென்று அடைகிறது
வேடனின் அம்பு

டும் ஓடையில்
குளங்களை பதித்து செல்கிறது
கடக்கும் யானை

ரக்கிளை
தாலாட்டி இறக்கி விடுகிறது
பழுத்த இலையை

வீசாத காற்றில்
ஓவியமாகிறது
மரக்கிளை

பிடிபட்ட பட்டாம்பூச்சி
ஓரிடத்தில் நிலையாய் இல்லை
குழந்தையின் கால்கள்

னியார் பள்ளி
வகுப்பறையில் இடம் மாறும்
ஏழைச் சிறுவன்

ரத்தில் பறவை
சிறகை படபடவென விசுறுகிறதே
கிளைக்கு வேர்த்திருக்குமோ??

ஞ்சலாடும் குழந்தை
விழுவதும் எழுவதுமாய்
நிலைக்கண்ணாடியில்

ற்றையடிப்பாதை
தடயமின்றி கடந்து செல்கிறது
வெட்டுகிளி

பூஜை அறை
திறந்ததும் கலைகிறது
வெட்டுகிளியின் தியானம்

யாருமற்ற அறையில்
என்னுடன் ஓயாயமல் உரையாடுகிறது
மெளனம்

ணியோசை கேட்டதும்
தலை நிமிர்ந்து பார்க்கிறது
வாங்கி வந்த கன்றுக்குட்டி

கைதவறிய கண்ணாடி
உடைந்ததும் சிரிக்கிறாள் சிறுமி
வெவ்வேறு கோணங்களில்

துளையில்லா மூங்கிலில்
ஏதை கேட்டோ இறகசைக்கிறது
இரு வண்ணத்துப்பூச்சிகள்

யதான பெண்மணி
அலங்காரம் செய்தப்பின் முறைக்கிறாள்
பாட்டி என்றழைத்ததும்

சொகுசு பேருந்து
பயணத்தில் என்னை ரசித்திருக்குமோ
சாலையோர மரங்கள்

டற்கரை தனிமையில்
அருகில் வந்து செல்கிறது
கடல் அலைகள்

லை சீவியதும்
கண் விழிக்கிறது
இளநீர்

விரைவாய் விடியட்டும்
சுகவீனத்துடன் விழித்திருக்கிறான்
இரவு காவலாளி
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்