வாய்மையைப் போற்றல் வரம் !
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
ஆனகவி என்றாலும் ஆசுகவி
என்றாலும்
மானிடம் சொல்லும் மனிதம் !
நாட்டு விழுப்பம் நவிலுமொழி
அன்பின்றிக்
கூட்டுமொழி யாகிலுமே கேடு !
தெய்வம் தொழுவார் திருமுறைகள்
பாடிவரும்
சைவர் புனிதரெனச் சாற்று !
கற்பனையும் காப்பும் கனியும்
திருப்பாக்கள்
சிற்பம் மரபென்றே செப்பு!
நாளெல்லாம் திட்டு நரம்புஇலா
நாக்கென்று
தேளாய்க் கடிக்கும் திடல் !
நேர்மையாய் நின்றும்
நிகழ்ச்சி அறமாயும்
வாய்மையே போற்றும் வரம் !
படைப்பாளி யாயிருந்தும்
பண்புஇலான் கெட்ட
நடைப்பிணமே நாத்தும் நரி !
நல்லசொல் சொல்லான் நயம்பற்று
இல்லானோர்
வல்ல கவியாய் வரான் !
அறம்பாடிச் செல்வான்
அடிக்கமலம் போற்றும்
திறம்பாடி யூற்றும் துயர் !
திட்டித் திரவியத்தைத்
தட்டிப் பறியென்ற
கெட்டான் இனத்துக் கிடர் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|