பொள்ளாச்சி

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 


 

பொள்ளாச்சி நல்ல பிறப்பார் மகத்துவங்கள்
இல்லா தொழிந்ததுவோ இன்று?

நாடு நரிகளென்றால் நாறும் விசுக்கல் என்றால்
ஊடு வலிதானே ஓடும் !

கற்புக்குக் கண்ணகியாள் காதற் தமயந்தி
பொற்காவி யங்கட் பிறப்பு !

தமிங்கிலங்கள் மண்ணைத் தறிக்கவென வந்த
திமிங்கிலங்க ளாலேதான் தீ !

கற்பை அழிப்பதுவும் கன்னிகொலை யாவதுவும்
அற்பன் மொழியழிப்பே ஆகும் !

இரத்தப் பிசிறேந்தி எஃகுப் பொறியில்;
மரத்த மனத்திருக்கும் வன்மம்!

குற்றவியல் நீதிக் கொடுமை உலகாளும்
முற்றும் பறந்த முதல்!

நல்லதமிழ் சொல்லான் நனியுறவை எண்ணான்
அல்லல் கொடுப்பான் அவன் !

நல்ல தமிழ்நாடே நந்தா விளக்கெல்லாம்
இல்லா தொழிப்பான் எதிரி !

காமம் மொழிச்சாடல் கன்னற் தமிழோடும்
தீமை பயப்போர் திருடர் !

 

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்