வெண்பாமாலை

கவிஞர் இராஜ்மீரா இராசையா


றுபிறப்பு உண்டு மறக்காதீ ரென்பர்
வறுமை செழிமையென வாய்ப்பு – பெறுதல்
நெறிமுறை வாழ்தலின் நீட்சியென்பர், அஃது
அறிதற் கரிய பொருள்.

ளநிலங் கொண்டுமே வான்நீரைத் தேக்கக்
குளங்கள் அமைத்துக் குடிகள் - தளர்வு
கலைத்து உழைப்பினைக் கவ்வின் வறுமை
நிலையாது நீத்து விடும்.

டின உழைப்பால் கனடாவிற் பெற்றோம்
துடிப்பு மரபுரிமைத் திங்கள் - பிடிப்பாய்த்
தலைமேற் சுமந்து தமிழ்மரபை இங்கும்
கலையாது காத்தல் கடன்.

ந்திரச் செய்கை தரணியில் ஆற்றித்தம்
சந்ததி வாழ வழிசமைக்கப் - பந்தாடும்
பல்லோர் வெறுத்திடு பண்பிலார் தம்மையும்
புல்லறிவு காட்டி விடும்.

திபதி துன்பம் படராது நீங்கும்
மதியுடை மாந்தர்தம் மாண்பால் – கதிரவன்
கற்றைகள் கண்டதும் காசினி தன்னிலே
புற்பனி பற்றுவிட் டாங்கு.

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்