மௌனவெளி
கவிஞர் கே.பி.பத்மநாபன்
அளவொத்த நாற்கோணக்
கட்டமைப்பில்
சதுரமோ செவ்வகமோ
அழகுமரபின்
வெண்பா, விருத்தங்களாய்.
ஈரெதிர்
நேரளவுக் கோணங்கள்
இணைகரங்களாய்ப்
புதுக்கவிதையென.
கோண அளவுகள்
குறுகியதோ விரிந்ததோ
பரப்பில் நாற்கரமே
ஹைக்கூப் பொறிகளாய்.
ஆக
நாற்கோணங்கள்
அமைவதெலாம்
நற்கவிதைகளாய்.
உரைக்கப்பெற்ற சொற்கள்போல்
உட்கோணங்கள்
எல்லையுடைத்து.
ஆயின்
எல்லையற்ற வெளிக்கோணங்களே
மௌனவெளி கவிப்பரப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|