ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் " இளவல் " ஹரிஹரன், மதுரை
வண்ணமயமாக்கிடும்
நடைபாதை எல்லாம்
பஞ்சு மிட்டாய்க்காரன்
திருவிழாக் கூட்டச்
சந்தடியிலும் கேட்கிறது
புல்லாங்குழல் விற்பவன் இசை
அசைந்து அசைந்து வரும்
தேரில் நிரம்பி வழிகின்றன
மக்களின் பிரார்த்தனைகள்
அத்தனைக்
கூட்டத்திலும்
அழகாய்த் தான் தெரிகிறது
கம்பீரமாய் வரும் யானை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|